Monday, November 14, 2011

என் பள்ளி ! - பாகம் - 1

என் பள்ளி !


திரு வி கல்யாண சுந்தரம் நடுநிலைப பள்ளி, அரும்பார்த்தபுரம், வில்லியனூர் கொம்யூன், புதுச்சேரி.

அற்புதமான அந்த நினைவுகள் இன்னமும் இன் வனாந்தர தேவதைகள் சூழ்ந்த என் இதயத்தில் செங்குருதி பாய என்னை இளமையாக வைத்துள்ளது.

அந்த இனிப்பான பழம் தரும் புளியமர நிழலும், சுற்று சுவர் இல்லாத வகுப்பறைகள், பள்ளியை ஒட்டிய ரயில் பாதை அது அப்போ அப்போ புகையை கக்கிகிட்டு போகும்போது நாங்கள் பாடங்களை கவனித்து கொண்டு அனிச்சையாய் கையை ஆட்டும் அந்த நாட்கள்...

காலையில்  தமிழில் பிரேயர் ஓய்ந்து நில் (Stand at is)  உறுதிகொள்   (Attention) என தொடங்கி
தமிழ்த்தாய் வாழ்த்து "வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே ! என ஆரம்பித்து  தினம் ஒரு மாணவன் ஒரு திருக்குறள் சொல்லி  அதற்க்கு விளக்கமும் சொல்லுவான். திங்கள் கிழமை தாயின் மணிக்கொடி பாரீர் ! என    கொடிவணக்கம் செலுத்தி களைந்து செல் (
disburse ) என முடியும்.

நல்ல நெத்தில விபூதி பட்டய போட்டுக்கிட்டு சைடு வகுடு எடுத்த தலையோட அப்போ பாண்டியில வி எஸ் டி ஜவுளி கட பயில புத்தகத்த தூக்கி சில சமயம் பையோட காத்து பிச்சுக்கும்,  அப்படியே சும்மா ஜாலிய அந்த ரோட்டோரமா நடந்து வர சோகமே தனிதான்.

எனக்கு நல்ல தெரியும் ஒரு காகி கலர் கால்சட்ட வெல்ல கலர் மேல்சட்ட, தரையில ஒக்காந்து தேச்சு தேச்சு பின்னால பஞ்சர் ஆகி ஒதுக்கு ஒட்டு போட்டு இருப்பேன் நான் மட்டும் இல்ல நெறைய பசங்க...எனக்கு தெரிஞ்சு நான் ஒன்பதாவது படிக்கறப்ப தான் ஜட்டி போட்டேன்னு நெனக்கிறேன், சில சமயத்துல பசங்க ஒன்னுக்கு முட்டிகிட்டு பல்லா  கல்லா கட்டும்போது  அத அழுத்தி அழுத்தி பசங்க படுற பாடு சிரிப்பா வரும் கால்சட்டைல ஜிப்புலாம் கெடயாது பட்டன் தான் அதுவும் இருக்காது அப்போ பாக்கணுமே பசங்கள எப்படா இன்டர்வெல் விடுவாங்கன்னு இருக்கும்.

இன்டர்வெல் விட்ட ஒடனே....

எனக்கு ஒண்ணாம் வகுப்பு நினைவுகள் அவ்வளவாக நினைவில் இல்லை என்றாலும் இரண்டாம் வகுப்பு நினைவுகள் கொஞ்சம் ஞாபகம் இருக்கு.

எங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை மற்றும் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு இவிகளுக்கு மட்டுமே செங்கற்களால் ஆன கட்டிடம் மத்த வகுப்புகள் எல்லாம் கூரைகள் தான். ஆனா எங்கள் தலைமை ஆசிரியர் அறைக்கு வலது புறம் இருந்த இரண்டு அறைகள் கொண்ட வகுப்புகள் கற்களால் கட்டப்பட்டது. அதில் இரண்டாவது அறையில் தான் என் வகுப்பு. எங்கள் வகுப்பை  ஒட்டினாப்போல சமையல் கட்டு. தரையில் தான் உட்காரவேண்டும். என் சக வகுப்பு தோழர்கள் பட்டாபி(இப்போது இவ்வுலகில் இல்லை )ரஜினி, தர்மலிங்கம், கங்காதரன், தனலக்ஷ்மி, சிவராமன், பாலு, சிட்டு குருவி (உண்மையான பேர் தெரியவில்லை), அசோகன், சிவப்பிரகாசம்(இவனுக்கு தனி கதை இருக்கு ), உமா , திலகம், நிர்மலா, கணபதி, சுந்தரராஜன், காஞ்சியப்பன்( தற்போது இவ்வுலகில் இல்லை ), செந்தில், பரந்தாமன், பிரபு , ராமலிங்கம், பர்மாவதி, கோவிந்தம்மாள், வாணி, பாக்கியலக்ஷ்மி, வெண்ணி சாமி, அசோகன், ராஜன் இன்னும் கொஞ்சம் பேர் எனக்கு ஞாபகத்துக்கு வரவில்லை.

பட்டாபி இவன் அப்போது அவன் வீட்டுக்கு தெரியாமல் தினம் தினம் வெண்ணை, அமுல் பால் பவுடர் எல்லாம் கொண்டுவருவான். என்னாடான்னா அவங்க அம்மா ஏதோ பால் சம்மந்தமா வேலை செய்யறாங்க. நான்தான் பெரும்பாலும் வகுப்புக்கு சீக்கிரம் வருவேன். பட்டாபி அடிக்கடி கொண்டுவரும் திண்பண்டங்களுக்காக ஒரு கூட்டம் அவன் பின்னாடியே காலையில சுத்தும். அவனவன் பட்டாபி கொஞசமா கொடுக்கறத வழிச்சி நாக்கில நக்கிப்பானுங்க.

No comments:

Post a Comment

பின்னூட்டமிட்டு செல்லுங்கள்...

தமிழில் வாக்கியம் அமைக்க