Monday, July 26, 2010

பஞ்சுமிட்டாய்காரனின் திசைக்காட்டி

பெருநகர தெருவழியே
பஞ்சுமிட்டாய்காரனின் திசைக்காட்டி
சலங்கையோடு அவனின் கைத்தடியின் உச்சியில் !
சந்தோசமாய் நடந்தான் - அவனின்
கால் நடந்த திசையில் !
ஜீன்ஸ் போட்ட பெண்மயில்களை
இரசித்துக்கொண்டு !

என் கனவுகள்
என்னிலிருந்து வெளியே
துள்ளிகுதித்தது மீனாய்
பெருநகர தார் சாலையில் !
கார்களின் போக்குவரத்து
நெரிசலில் சிக்காமல்...
மாநிலம் மாநிலமாய்
தண்ணீரைத்தேடி !

என் வீட்டில் கூரயில் பெய்த மழை
கார்முகில்சூழ மின்னலும் இடியுமாகி
பாதரசமாய் முற்றதிலே...

-யாகார்

ஒரு கனம்

அந்த ஒரு கனம்
இரவு பதினொறு மணி
பகலேல்லாம் சுற்றி-என்
கூண்டுக்குள் அடைக்கலமாகி !
என் நெஞ்சம் படபடத்து
பெருமூச்செறிந்து விம்மியழுதது
பார்த்தவுடனே இதயத்தில்
ரத்தநாளங்களின் நர்த்தனத்திலே
சித்தம் குழம்பலானேன்
கனவுகளை வெடிக்கச் செய்து
கண்ணீர் துளியின் பிசுபிசுப்பு!

மதுவின் மயக்கமும் மங்கிப்போகவே
சிந்தனை தெளிவின்றி - என்
சநதோஷத்தை தொலைத்து
நாடிநரம்புகள் ஒடுங்கிப்போக
பயத்திலே கண்கள் சொருக - இன்னமும்
அழாமலே இருக்கிறேன் !

பதட்டத்திலே பசியறியேன் !
இது எனக்கு முதல் அனுபவம் !
பசுமரத்தானியாய் !
என்ன செய்வதென்று தெரிய
நேரம் பனிரெண்டு !
ஆமாம் என் வாழ்க்கையை
மொத்தமாய் வைத்திருந்தேன்
பணப்பையில்(மணி பர்ஸ்)
கடன் அட்டை(கிரெடிட் கார்டு), பற்று அட்டை(டெபிட் கார்டு) வடிவிலே!
அத்தனையும் காணாமல் போய்
ஆப்பசைத்த குரங்காய்,
குழல் விளக்கு(டியூப் லைட்) வெளிச்சத்தில்
இருள் சூழ நின்றேனே !
அந்த கனம்.....

-யாகார் 

Tuesday, July 13, 2010

திருமண நம்பிக்கை

திருமண நம்பிக்கை
ஊர்க்குருவியாய் பறந்த என்னை
தூக்கனாங்குருவியாய் தொங்களில்
விட்ட தருணம்.....
அமைதியையும் ஆனந்ததிற்கும்
ஆப்பு வைக்க வந்த
அழகிய ராட்சசி....
மணமான பின்புதான்-அடுத்த
வாழ்க்கை துவங்குகிறதென்ற
மூடநம்பிக்ககையை நம்பிக்கையாய்
வளர்த்துவிட்ட உலகம்...
மனிதனின் நம்பிக்கை
இடத்திற்கேற்ப மாறுகிறது
நிறமாறும் ஓனானைப்போல!
ஆனால்...
திருமண நம்பிக்கை மட்டும்
எந்த இடத்திலும் மாறுவதில்லை

--யாகார் 

கனவு

கனவு

விரிந்து பரந்த என் கனவு
என்னில் என்னை மட்டுமே
அண்ட சராசரங்களையும்,
என் உலகில் காணும்
கலியுக கண்ணன் நான்!
நான் சிருஷ்டிக்கிறேன்
அழிக்கிறேன், ஆள்கிறேன் !
என் மேல் மாடி
வெற்றிடமாக்கப்பட்டிருக்கலாம் !
என்னை நீ வரையறுக்காதே !
விரிந்து பரந்த வெளியில்
எனக்கான சுவாசத்தை
சுகமாய் சுவாசிக்க விடு
என் கனவுகளை திருட
உனக்கு அனுமதியில்லை
அதற்கு அதிகாரமுமில்லை....

--யாகார்

மழை

மழையில் நாங்கள்...
கோனிப்பையை குடையாக்கி
கலவெட்டியால் (மம்மட்டியில்லை)
மண்னை நீவிவிட்டு
தண்ணீர் வீட்டுக்கு உள்ளே வராமல்
தடுக்கும் என் அம்மா
கோனிப்பை நனைந்து
அம்மாவும் நனைந்து....


வீட்டின் முற்றத்தில்
நானும் தம்பியும்
சட்டையின்றி குளிரில்
சுருங்கிய குஞ்சியை
இழுத்து அடித்த மூத்திரமும்
மழையோடுதான் கலந்தனவே !
ஒட்டுபோட்ட கால்சட்டையில்
ஜட்டி போடாத என் பின்புறத்தை
சீண்டி விளையாடி கோவத்தை
கிண்டும் தம்பி
 எதிரே காரைவீட்டு
திண்ணையில் வேடிக்கை
பார்க்கும் சாம்பார்(எங்கள் ஊர் பெரிய்ய்ய் மனிதர்) சம்சாரம்
அப்பாவின் அதிகாரம்
அப்போதும் குறையவில்லை
அவருக்கு மட்டும் ஒரு கிழிந்த குடை !
குட்டிச்சுவர் விழாமல் இருக்க
சஞ்சீவி மலை தூக்கிய அனுமானாய்
மேலே கூரை !


எங்களின் சந்தோசம்
மழையைவிட பெரிசு அதேபோல்
எங்க வீட்டு கூரையில
விழும் மழைத்துளி கூட
சுத்தமாயிருந்தது ....


--யாகார்  

Saturday, July 10, 2010

பாஞ்சாலி சபதம்

பாஞ்சாலி சபதம் தெருக்கூத்து

அரிதார முகங்களின்
ஆர்ப்பரிக்கும் வரலாற்று வசனங்கள்
குப்பனுக்கும் சுப்பனுக்கும்
புரிந்து கொள்ளும்படி
வஞ்சகத்தை வாழ்க்கையாக்கி
வாழ்ந்த சகுனி மாமா
பிளிறு போல் வந்தமர்ந்த பீமன் தோரணை
தோற்றுப்போன விரக்தியில் தருமன்
அவனையே திட்டிய  திரௌபதி
பெட்ரோமாஸ் வெளிச்சத்தில்
பதிந்து விட்ட வரலாறு
அடித்து வைத்த கூடாரங்கலாய்
மக்கள் கூட்டம் ...

--யாகார்

வெளிச்சம் பட்ட விண்மீனாய் !

என் எதிரில்
கதவின் தாழ்ப்பாள்
என்னை பழிக்கிறது !
மூடும் போதும் திறக்கும் போதும்
கீச் கீச் சத்தம் !
ஜன்னலின் வழியே
கருப்பு பூனையின்
கண்கள் வெளிச்சம் பட்ட விண்மீனாய் !
கம்பிக்குள்ளே நான்...
காயவைத்த டவல்-எனக்கு
சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது
நானோ !
வெள்ளை பேப்பரில்
வண்ணங்களை தேடிக்கொண்டிருக்கிறேன் !
விவித் பாரதி வானொலியில்
நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

--யாகார்

உளி வாங்கிய கல்லாய்

முகடுகளின் விளிம்புகள்
மலையென விழிப்பின்
பள்ளம் பாதாளம் - என்
உடம்பை தாவர பூச்சு கொண்டு
மின்னலானேன் ...
உளி வாங்கிய கல்லாய் !
இன்னமும் சீர்பட்டுக்கொண்டிருக்கிறேன்
சிலையாவதர்க்கு !

- யாகார்

Monday, July 5, 2010

நகரம்

என்னுள் எழுந்த எழுச்சிகளை
ஏர் முனைகொண்டு வடித்தேன்
பிடித்த பேனா முனையில்
பிடிக்காத நகரத்தின் வாழ்க்கையை
நாகரீக மிருகத்தை சிதைக்கலானேன்
எச்சமாய் நான் மட்டும் ...


இயற்கை தேவதைகளின்
சோம்பிய ரேகைகள்
கண்ணாடியில் ஊடுருவிய
ஒளிக்கற்றைகளாக...

-- யாகார்

குதிரை

 குதிரை
எனக்குத் தெரியும் அது
அடிபட்ட குதிரைகளின்
குரல்கள் என்று !
எசமானர்களின் ஆளுமைக்கு
அடிபணிந்த குதிரைகளின் குரல்கள்
லாயத்தை விட்டு
வெளிவர மறுக்கும் குதிரைகள்
அடங்கி போக
பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகள்
பக்குவப்பட்டுபோன குதிரைகள்
காப்பு காய்ந்த தோள்களில்
இன்னமும் ...
எசமானர்களை சுமக்கும்
வாய் பேசாத குதிரைகள்.

- யாகார்  

காகித பூக்கள்...

காலச் சக்கரத்தின் வேகத்தில் 
பாடினிகளின் எந்திரக் கவிகள் 
கம்பனோடு போன கற்பனை வரிகள் 
மீண்டும் உயிர்ப்பிக்க யாருமில்லை 
இந்த பூலோக வனாந்தரத்தில் 

கூந்தலுக்குள் சிக்கிய வரிகள் 
கவிதையென்று பின்னி 
சிற்றின்ப சரங்களாய்
காகித  பூக்கள்...

- யாகார்

அவதாரம்

மேலும் ஒரு அவதாரம் !
என்னில் சரிபாதிக்கு - என்னில்
சரிபாதியை கொடுத்த அவ தாரம் !
அரிதாரம் போடாமல்
மீண்டும் ஒரு நாடகம்
மனங்களின் மொழிகள்
மௌனங்களின் தொடுதலில்
புதிய பரிணாமம் !
இங்கே நான் அவள் விலங்கை
உடைக்க அவளோ
விலங்கிற்கு பூட்டு போடுகிறாள்
என் ஆணவத்திற்கு
மீண்டும் ஒரு பரீட்சை ...
புரிதலின்றி கண்களின் மொழி பரிமாற்றம்
தேடுதலில் இன்னமும்...

நன்றி !!!

தமிழில் வாக்கியம் அமைக்க