Monday, August 9, 2010

வெற்றிடம்

எந்நேரமும் எக்காலத்திலும் காவிக்கொடி
பறக்கவிட்டால் பட்டுப்போய்விடும்
நம்மவர் வாழ்வு !


ஆன்மீக வெற்றிடம் அதிபயங்கரமானது
ஆதலினாலே தேவை ஒரு சாமியார் !
வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ள
முன்னவர் போலியானபோதும் !


சரச சல்லாப ஆன்மீகப் பயிற்சி
வாழ்வின் சராசரி இன்பங்களின்
ஆபாச கிளர்ச்சி !


சம்சாரியின் துறவு சன்யாசம்
சகலமும் வரவு இன்றைய
சாமியார் வசம் !


மாற்றான் தோட்டத்து மல்லிகை
மனக்கத்தான் செய்யும் - அது
சாமியாரின் ஆசிரமதோட்டத்தில்...
ஆண்டவனே(!) அனுபவிக்கும்போது
சரச சல்லாப ஆன்மீகப் பயிற்சி

வீட்டினுல்லே இருக்கும்வரை சந்தொசம்
வீதிக்கு வந்த போது விபச்சாரம்.

-யாகார்

Monday, July 26, 2010

பஞ்சுமிட்டாய்காரனின் திசைக்காட்டி

பெருநகர தெருவழியே
பஞ்சுமிட்டாய்காரனின் திசைக்காட்டி
சலங்கையோடு அவனின் கைத்தடியின் உச்சியில் !
சந்தோசமாய் நடந்தான் - அவனின்
கால் நடந்த திசையில் !
ஜீன்ஸ் போட்ட பெண்மயில்களை
இரசித்துக்கொண்டு !

என் கனவுகள்
என்னிலிருந்து வெளியே
துள்ளிகுதித்தது மீனாய்
பெருநகர தார் சாலையில் !
கார்களின் போக்குவரத்து
நெரிசலில் சிக்காமல்...
மாநிலம் மாநிலமாய்
தண்ணீரைத்தேடி !

என் வீட்டில் கூரயில் பெய்த மழை
கார்முகில்சூழ மின்னலும் இடியுமாகி
பாதரசமாய் முற்றதிலே...

-யாகார்

ஒரு கனம்

அந்த ஒரு கனம்
இரவு பதினொறு மணி
பகலேல்லாம் சுற்றி-என்
கூண்டுக்குள் அடைக்கலமாகி !
என் நெஞ்சம் படபடத்து
பெருமூச்செறிந்து விம்மியழுதது
பார்த்தவுடனே இதயத்தில்
ரத்தநாளங்களின் நர்த்தனத்திலே
சித்தம் குழம்பலானேன்
கனவுகளை வெடிக்கச் செய்து
கண்ணீர் துளியின் பிசுபிசுப்பு!

மதுவின் மயக்கமும் மங்கிப்போகவே
சிந்தனை தெளிவின்றி - என்
சநதோஷத்தை தொலைத்து
நாடிநரம்புகள் ஒடுங்கிப்போக
பயத்திலே கண்கள் சொருக - இன்னமும்
அழாமலே இருக்கிறேன் !

பதட்டத்திலே பசியறியேன் !
இது எனக்கு முதல் அனுபவம் !
பசுமரத்தானியாய் !
என்ன செய்வதென்று தெரிய
நேரம் பனிரெண்டு !
ஆமாம் என் வாழ்க்கையை
மொத்தமாய் வைத்திருந்தேன்
பணப்பையில்(மணி பர்ஸ்)
கடன் அட்டை(கிரெடிட் கார்டு), பற்று அட்டை(டெபிட் கார்டு) வடிவிலே!
அத்தனையும் காணாமல் போய்
ஆப்பசைத்த குரங்காய்,
குழல் விளக்கு(டியூப் லைட்) வெளிச்சத்தில்
இருள் சூழ நின்றேனே !
அந்த கனம்.....

-யாகார் 

Tuesday, July 13, 2010

திருமண நம்பிக்கை

திருமண நம்பிக்கை
ஊர்க்குருவியாய் பறந்த என்னை
தூக்கனாங்குருவியாய் தொங்களில்
விட்ட தருணம்.....
அமைதியையும் ஆனந்ததிற்கும்
ஆப்பு வைக்க வந்த
அழகிய ராட்சசி....
மணமான பின்புதான்-அடுத்த
வாழ்க்கை துவங்குகிறதென்ற
மூடநம்பிக்ககையை நம்பிக்கையாய்
வளர்த்துவிட்ட உலகம்...
மனிதனின் நம்பிக்கை
இடத்திற்கேற்ப மாறுகிறது
நிறமாறும் ஓனானைப்போல!
ஆனால்...
திருமண நம்பிக்கை மட்டும்
எந்த இடத்திலும் மாறுவதில்லை

--யாகார் 

கனவு

கனவு

விரிந்து பரந்த என் கனவு
என்னில் என்னை மட்டுமே
அண்ட சராசரங்களையும்,
என் உலகில் காணும்
கலியுக கண்ணன் நான்!
நான் சிருஷ்டிக்கிறேன்
அழிக்கிறேன், ஆள்கிறேன் !
என் மேல் மாடி
வெற்றிடமாக்கப்பட்டிருக்கலாம் !
என்னை நீ வரையறுக்காதே !
விரிந்து பரந்த வெளியில்
எனக்கான சுவாசத்தை
சுகமாய் சுவாசிக்க விடு
என் கனவுகளை திருட
உனக்கு அனுமதியில்லை
அதற்கு அதிகாரமுமில்லை....

--யாகார்

மழை

மழையில் நாங்கள்...
கோனிப்பையை குடையாக்கி
கலவெட்டியால் (மம்மட்டியில்லை)
மண்னை நீவிவிட்டு
தண்ணீர் வீட்டுக்கு உள்ளே வராமல்
தடுக்கும் என் அம்மா
கோனிப்பை நனைந்து
அம்மாவும் நனைந்து....


வீட்டின் முற்றத்தில்
நானும் தம்பியும்
சட்டையின்றி குளிரில்
சுருங்கிய குஞ்சியை
இழுத்து அடித்த மூத்திரமும்
மழையோடுதான் கலந்தனவே !
ஒட்டுபோட்ட கால்சட்டையில்
ஜட்டி போடாத என் பின்புறத்தை
சீண்டி விளையாடி கோவத்தை
கிண்டும் தம்பி
 எதிரே காரைவீட்டு
திண்ணையில் வேடிக்கை
பார்க்கும் சாம்பார்(எங்கள் ஊர் பெரிய்ய்ய் மனிதர்) சம்சாரம்
அப்பாவின் அதிகாரம்
அப்போதும் குறையவில்லை
அவருக்கு மட்டும் ஒரு கிழிந்த குடை !
குட்டிச்சுவர் விழாமல் இருக்க
சஞ்சீவி மலை தூக்கிய அனுமானாய்
மேலே கூரை !


எங்களின் சந்தோசம்
மழையைவிட பெரிசு அதேபோல்
எங்க வீட்டு கூரையில
விழும் மழைத்துளி கூட
சுத்தமாயிருந்தது ....


--யாகார்  

Saturday, July 10, 2010

பாஞ்சாலி சபதம்

பாஞ்சாலி சபதம் தெருக்கூத்து

அரிதார முகங்களின்
ஆர்ப்பரிக்கும் வரலாற்று வசனங்கள்
குப்பனுக்கும் சுப்பனுக்கும்
புரிந்து கொள்ளும்படி
வஞ்சகத்தை வாழ்க்கையாக்கி
வாழ்ந்த சகுனி மாமா
பிளிறு போல் வந்தமர்ந்த பீமன் தோரணை
தோற்றுப்போன விரக்தியில் தருமன்
அவனையே திட்டிய  திரௌபதி
பெட்ரோமாஸ் வெளிச்சத்தில்
பதிந்து விட்ட வரலாறு
அடித்து வைத்த கூடாரங்கலாய்
மக்கள் கூட்டம் ...

--யாகார்

வெளிச்சம் பட்ட விண்மீனாய் !

என் எதிரில்
கதவின் தாழ்ப்பாள்
என்னை பழிக்கிறது !
மூடும் போதும் திறக்கும் போதும்
கீச் கீச் சத்தம் !
ஜன்னலின் வழியே
கருப்பு பூனையின்
கண்கள் வெளிச்சம் பட்ட விண்மீனாய் !
கம்பிக்குள்ளே நான்...
காயவைத்த டவல்-எனக்கு
சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது
நானோ !
வெள்ளை பேப்பரில்
வண்ணங்களை தேடிக்கொண்டிருக்கிறேன் !
விவித் பாரதி வானொலியில்
நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

--யாகார்

உளி வாங்கிய கல்லாய்

முகடுகளின் விளிம்புகள்
மலையென விழிப்பின்
பள்ளம் பாதாளம் - என்
உடம்பை தாவர பூச்சு கொண்டு
மின்னலானேன் ...
உளி வாங்கிய கல்லாய் !
இன்னமும் சீர்பட்டுக்கொண்டிருக்கிறேன்
சிலையாவதர்க்கு !

- யாகார்

Monday, July 5, 2010

நகரம்

என்னுள் எழுந்த எழுச்சிகளை
ஏர் முனைகொண்டு வடித்தேன்
பிடித்த பேனா முனையில்
பிடிக்காத நகரத்தின் வாழ்க்கையை
நாகரீக மிருகத்தை சிதைக்கலானேன்
எச்சமாய் நான் மட்டும் ...


இயற்கை தேவதைகளின்
சோம்பிய ரேகைகள்
கண்ணாடியில் ஊடுருவிய
ஒளிக்கற்றைகளாக...

-- யாகார்

குதிரை

 குதிரை
எனக்குத் தெரியும் அது
அடிபட்ட குதிரைகளின்
குரல்கள் என்று !
எசமானர்களின் ஆளுமைக்கு
அடிபணிந்த குதிரைகளின் குரல்கள்
லாயத்தை விட்டு
வெளிவர மறுக்கும் குதிரைகள்
அடங்கி போக
பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகள்
பக்குவப்பட்டுபோன குதிரைகள்
காப்பு காய்ந்த தோள்களில்
இன்னமும் ...
எசமானர்களை சுமக்கும்
வாய் பேசாத குதிரைகள்.

- யாகார்  

காகித பூக்கள்...

காலச் சக்கரத்தின் வேகத்தில் 
பாடினிகளின் எந்திரக் கவிகள் 
கம்பனோடு போன கற்பனை வரிகள் 
மீண்டும் உயிர்ப்பிக்க யாருமில்லை 
இந்த பூலோக வனாந்தரத்தில் 

கூந்தலுக்குள் சிக்கிய வரிகள் 
கவிதையென்று பின்னி 
சிற்றின்ப சரங்களாய்
காகித  பூக்கள்...

- யாகார்

அவதாரம்

மேலும் ஒரு அவதாரம் !
என்னில் சரிபாதிக்கு - என்னில்
சரிபாதியை கொடுத்த அவ தாரம் !
அரிதாரம் போடாமல்
மீண்டும் ஒரு நாடகம்
மனங்களின் மொழிகள்
மௌனங்களின் தொடுதலில்
புதிய பரிணாமம் !
இங்கே நான் அவள் விலங்கை
உடைக்க அவளோ
விலங்கிற்கு பூட்டு போடுகிறாள்
என் ஆணவத்திற்கு
மீண்டும் ஒரு பரீட்சை ...
புரிதலின்றி கண்களின் மொழி பரிமாற்றம்
தேடுதலில் இன்னமும்...

நன்றி !!!

Monday, June 28, 2010

மாலை நேரம்


என் வீட்டு வாசற்படி 
இன்னும் உயரவில்லை !
குனிய மறுத்து 
இடித்த என்தலை 
வலி இன்னும் குறையவில்லை !
மாற்றம் வரும் வரை ...


 
மாலை நேரம் 
மயக்கும் இனிமை !
முகத்தையும் உடலையும் 
அழகூட்டி ....
கொன்றை மலர் சூடிய 
பெண்கள் 
தென்றலாய் ....
சூரியனின் மீது கோப கண்களை 
உருட்டியவாறு ...
முனகிய வாய்களில் 
வெறுப்பை உமிழ்ந்து 
தேடின வாசற்படியை நோக்கி !

இந்த கவிதைகளை எல்லோரும் படிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் ஓட்டை இங்கே பதிவு பண்ணுங்கள்....மேலும்  கருத்துக்களை என் இணைய முகவரிக்கு அனுப்புங்கள் . நன்றி !

என் கோவம் ... இளமை

என் கோவம் ...
சுதந்திர பூமியில் 
எங்களின் சுதந்திரம் 
காந்திகளால் விற்கப்பட்டது !
மறைக்கப்பட்ட தியாகிகளால் 
மீட்டெடுக்க முடியவில்லை 
மண்ணுக்குள்ளே கண்ணிவெடிகள் !

இளமை 
என் முன்னோர்களின் இளமை 
அவர்களின் 
நெற்றிச் சுருக்கங்களிலும் 
வெண்ணிற கேசத்திலும் !
தாயார்களின் 
அகன்ற இடையிலும் 
தொளதொள வென்று 
தொங்கிய முலைகளிலும் !
நாங்கள் ...
எங்களின் இளமையை 
தேடிக்கொண்டிருக்கிறோம் !!!


  இந்த கவிதைகளை எல்லோரும் படிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் ஓட்டை இங்கே பதிவு பண்ணுங்கள்....மேலும்  கருத்துக்களை என் இணைய முகவரிக்கு அனுப்புங்கள் . நன்றி !

Wednesday, June 16, 2010

வயிற்றுப்பசிக்காக...

கன்னித்திரை கிழிந்த
கானகத் தேவதைகள்
கடித்து துப்பிய
எச்சிலின் ஈரம் !
நட்சத்திர சிதறல்களாய் மின்னும்
அடிமைத்தனத்தின் உதிரங்கள் ...
நாங்கள் வயிற்று வலிக்காக
மதம் மாறியவர்களல்ல
வயிற்றுப்பசிக்காக ஓன்று சேர்ந்த
உழைப்பாளிகள் .

பரோபகாரி ...

இருட்டினுடே மிளிரும் கண்களில்
என் ஒப்பனை முகத்தை
கறுப்புத்துணியால் மூடி
சுவாசத்தை நனைத்துக்கொண்டிருந்தேன் !

காரிருள் கருமேக
கூந்தல் விரித்த நிலையில்
வேடமிட்ட ஸ்திரீயின்
பின்னால் சுழலும்
வண்ண காகித விளக்கு !

சுவற்றினை மோதி மோதி
முத்தமிட்டு !
படிகாரத் துகள்களில்
பளிங்குமாளிகை கட்டும்
பரோபகாரி ...

இரவு நேர விருந்து ...

விரசக் கைகளின்
விட்டில் பூச்சிகளாய் !
வனாந்தரத்தில் மையல் கொண்ட
கண்ணாடித் தேக
காந்தர்வ கன்னிகளின்
முலைகளில்
வடியும்
அமுதத்தை திருடும்
காமுகக் காரனின்
இரவு நேர விருந்து ...

Monday, June 14, 2010

துரத்தப்பட்ட நினைவுகள் ...

என்னால் துரத்தப்பட்ட
நினைவுகள் ...

நிழலாய் பின்னே !
மறுக்கப்பட்ட
மரபுகளால்
துரத்தியடிக்கப்பட்ட
பிண்டங்களின் பின்னலாய் ...

அடிமாட்டு தொண்டர்கள் ...
என் ஜாதி என் ஜாதி ...
எண்சான் உடம்பை
கூறுபோட்ட ஜாதிதளைவர்களின்
கூர்மையான
அறிவால்
அறுக்கப்படும்
அடிமாட்டுத்தொன்டர்கள்
இன்னும் இன்னும் ...

எதிர்வீட்டு மாடியில்
நிரம்ம்பி வழியும் நீர்த்தொட்டி
அணைகள் திறக்கப்படவில்லை

கூண்டுக்குள் பேசும்
கிளிகள் ...
பூனைகள் வெளியே

நண்பனின் குயிலோசை
கேட்டு எழுந்தேன்
காகம் கரைந்தது

மதில்மேல் பூனை
என்னைப் பார்த்தது
புதிய ஆட்சி மாற்றம் !

ஆடுபுலி ஆட்டம்
ஆலமர நிழலில்
சாதிப்படுகொலைகள் !

கிறுக்கல்...

கிறுக்கல்... எனக்கு தொழில் கவிதை எழுதுவதல்ல ஆனால் மனதில் பட்டதை பார்த்ததை உரைநடையை உடைத்து எழுதுகிறேன் நன்றாக இருந்தால் உற்சாகப்படுத்துங்கள்...

குறைகள் இருந்ததால் உரக்க சொலலுங்கள் திருத்திக்கிறேன்.

ஓட்ட பானையில
ஓராழாக்கு அரிசி போட்டு
ஈரத்துணிய வயித்துல காயப்போட்டு
ஈரெழு லொகத்தையும் ஆண்டவங்க நாங்க !

ஆர்மேனிய பெட்டியில
ஏழு ஸ்வரத்துக்கு பதிலா எங்களின் ஒப்பாரி !
தாலாட்டு பாட்டுக்குள்ளே-எங்களின்
தாராளம் தெரியுதண்னே !

தூளி கட்ட எங்களின்
துகிலை கழற்றினோம்
துரொபதியின் மானம் காத்த
கண்ணன் இங்கு கானோமே!

என் சேலையில புல்லுண்டு,
பூ உண்டு காய் உண்டு,
கணி யுண்டு மரம் உண்டு, மலை யுண்டு
கூடவே பிஞ்சும் இருக்க-எங்களின்
திறந்த மனம் ஓரமாய் சிரிக்கிறது !
ஆண்டையிடம் வேண்டுகிறோம்
ஆண்டவண் இருந்தால்
ஆவண செய்ய சொல்லி !
இனி எங்களுக்கு
இலவசம் வேணாம்.

Saturday, May 22, 2010

கொடை பயணம் ( KODAI TRIP)

கொடை பயணம் ( KODAI TRIP)
கோடை வெய்யிலின் சூட்டை தனிக்க
கொடைக் கானலுக்கு...

சென்னையிலிருந்து...
தன்னார்வலர்கள் பலபேரானாலும்
தயாரானது ஒரு ஜதை

இரவினில் பயணம்
காலையில் குட்மார்னிங்
விடைபெற்றது சென்னை மாநகரம்
விடிந்தது திண்டுக்கல்லில்
தயாராக காத்திருந்தது குட்டி பேருந்து
பசியார தோசையும், பூரியும், காபியும்
புசித்து விட்டு பேருந்து படியேறினோம் மலை நோக்கி . . .

இயற்கை எழில் கொஞ்சும்
இருபுறமும் மலைகள்
இறச்சலிடும் பறவைகள்
வின்னைமுட்டும் மரங்கள்
வியக்கவைக்கும் இயற்கையின்
விசித்திரங்கள்...
வசந்ததின் வாயில்
திறக்கப் படுகிறது
திறவுகோளாய் எங்களின் சத்தம்.

வரவேற்பு எங்களுக்கு...
தாரை தப்பட்டைகள் பட்டையை கிளப்ப
பட்டாசு சத்தங்கள் வின்னை பிளக்க
பேண்டு வாத்தியங்கள் பின்னியெடுக்க (அப்படியா?)
அடடா இது கனவா !?
பேருந்தில் கொஞ்சம் தூங்கியதன் விளைவு !
இவையெதுவுமின்றி
வாஞ்ஞையுடம் வரவேற்ற
டாக்டரும், உற்றோரும்...

வந்த களைப்பு
வழித்தடம் தெரியாமல் போக
நின்ற இடம் சொர்க்கபுரியாய் !
கோவைக் குசும்புகளும்
கோர்வையாய் சேர்ந்துவிட
கோலாகலமாய் புறப்பட்டது
எங்களின் பேருந்து
மலை நோக்கி மந்தமாய்...

மத்தியான சாப்பாடு
மீனாட்சி பவனில்
அரங்கு நிறைந்த காட்சி
காத்திருந்த நாங்கள் சாட்சி
பளபளப்பு மீனாட்சி
பந்தியில் மின்னவில்லை
வியர்வை சிந்தி உண்டோம்
விரயமானது காலம்...

1872 ல் கோக்கர் கட்டிய பாதை
நாங்கள் நடந்ததால்
விமோச்சனம் பெற்றது(அவ்வளவு நல்லவனா நீயி)
ஆனாலும் அற்புதம் - வென்
மேக மண்டலத்துள்-நாங்கள்
வெள்ளையாடை தரிக்காத
தேவர்கள் தேவதைகள்! (நெசமாத்தாங்க)
வெள்ளைக்காரன் கட்டாவிட்டாலும்!
அடிமையாகயாகத்தான் இருப்போம்-அந்த
வென்மேக கூந்தல்காரிக்கு...

நடைபாதையில் நாங்கள்...
கன்னிகளை கண்களால் சுட்டோம்
"கன்"னால் பலூனையும் சுட்டோம்!
கைக்குட்டை தரையில் போட்டு
கைசெலவுக்கு சில்லரை பார்த்தோம்!
மாறும் முகம் மறைக்க
முகமூடிதான் அணிந்தோம்,
ஜோடியாய் வந்தவர்களும்-எங்களுடன்
சோக்காளியாய் திரிந்தனரே !

படகுப் சவாரி...
படகுப் சவாரி போக போரோமென்று
குதிரை சவாரி சென்று
குதூகலம் அடைந்து நின்றோம்!
மிதிவண்டி மிதித்துச்சென்று
மின்னலுக்கு வலைவிரித்தோம்!
வான்மேகம் வழி மறித்தோம்
வாயினால் புகையை விட்டு
வயதினை மறந்து மகிழ்ந்தோம்!
திரண்ட வந்தது கருமேகம்
நனைந்து போனது எங்கள் தேகம்!
குடைக்குள்ளே மழையாய்
ஒழுகியது படகு குழாம்
படகு சவாரிக்கு தற்காலிக ஒத்திவைப்பு !
சுதியின்றி தவித்த மக்கள்
குளிருக்கு சொட்டர் போட்டோம்

இரவு சாப்பாட்டுக்கு
அல்டாப்பு பண்ணிக்கொண்டு
ஹில்டாப்பு ஹோட்டல் போனோம்.

இரண்டாம் நாள்

சில்லிட்ட தண்ணீரில்
சிலையாகிப் போகமறுத்து
கடன்களை முடித்து விட்டு
கதிரவனை எழுப்பினோம் ! (அப்போ குளிக்கலையா.... அடப்பாவிங்களா !)
சுருங்கிய தேகத்துடன்
சுடசுட தேனீர்
தேகத்தை விரைப்பாக்கி
தேமேன்னு கிளம்பினோம்-காலை உணவு

பேரிஜம் செல்ல பேரின்பம்
செல்லும் வழியெங்கும்
இயற்கையின் வரவேற்பு
மேகத்தில் கலந்து
தேகத்தில் ஏறிய குளிர்

வழியெங்கும் வாகனங்களின் அணிவகுப்பு
இயற்கை சீரழிவு
வருங்காலத்தில் கொடைக்கானல்
கரும்மேகம் யெல்லாம்
கார்பன்-டை-ஆக்சைடாக
பிளாஸ்டில் கழிவுகளின்
கூடாரமாக மாறும் பேராபத்து !

நீண்ட் நெடிய கடிய மரங்கள்
ஊடால பாயும் வென்னிர மேகக் கூட்டம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
சிவராஜ்-சிலிர்த்தெழுந்த சிங்கம்ல...

ஆஹா இதென்ன...
மூத்த சிங்கத்தின் முதிர்ச்சியான ஆட்டம்
பார்த்த எங்களுக்கு பயிற்சி ஆட்டம்
தெலுங்கு தேச ஹீரோவின் பெயரில்
பாதியை வைத்துகொண்டால் இப்படியா சார்!
அசத்தல் ஆட்டம் - ஓ போடு

ஸ்ருதி...
நானிலிருந்து புறப்பட்ட அம்பாய் (எவ்ளோ வேகம்...)
என்ன அது கயலா ! ? கண்களா!
முப்பெரும் தேவியராய் - நீங்கள் (ஸ்ருதி, ஆயிஷா, பூர்ணிமா)
கொடையை கலக்கிவிட்டு
கோடையை குளிர்ச்சியாக்கிவிட்டீர்கள்!
ஆடியா ஆட்டமென்ன...?

அன்னலட்சுமி...
ஆர்ப்பாட்ட லட்சுமியாய் !
ஆடவர்க்கு ஈடாக ஆட்டத்தில் !
நடு ரோட்டில் கலக்கிய காக்டெயில் !(பாவமாய் ஆனந்த்)
அங்கங்கே கேமராமேனாய் டாக்டர் (படம் நல்லா வந்திருக்கா சார்?
உங்களுக்கு தெரியுமா ?
ஹிப் டேன்ஸ் இலியானாவ
கிராப்பு வச்ச கோவை பாவை!
கலக்கிட்டீங்க புரபஸர்?

வனாந்தரத்தின் பிடியில்
தாவரத்தேவதைகளின் வனப்பு
மறைந்த முகங்களை காட்டும்
கண்ணாடி சிதறல்களாய்
புற்களின் நுனியில்..

வெள்ளையடித்த வானத்தில்
வண்ணம்தீட்ட நாங்கள்--பேரிஜம் நோக்கி
ஒத்தயடிப்பாதை வளைவு நெளிவுகளோடு
ஆரவாரமற்ற காட்டில்
ஆர்ப்பாட்டமாய் நாங்கள் மட்டும்
வனப்பு மிக்க காட்டெருமை
ஆஹா என்ன அழகு
நீண்டதொரு பயணம்
இளமையின் நீட்ச்சி !

ஆளில்லா பேரிஜம்
அற்புதத் மலைத்தீவு
இயற்கையின் இன்னுமொரு படைப்பு
மக்களின் குதூகலம்
மனதிற்கு இதம்

மதிய உணவு
புளியோதரையும், வெ.பிரியாணியும்
சாப்பிட்டு முடிக்குமுன்னே
ஸ்ருதியின் அலறல்
அட்டையில் அன்புப்கடியில்!
அட்டைக்கு இரத்தம் கொடுத்த
முதல் கொடை வள்ளல்.

மே முதல் நாள் என்பதால்
எங்களை சுற்றிக்காட்ட ஆளில்லை
நாங்களே சுற்றிக்கொண்டோம்
பேரிஜம் ஏரி, பேரின்ப நடைபாதை
முருகன் கோயில், முத்துக்களாய் நாங்கள்
சதுப்பு நிலம், சதிராடும் நாங்கள்!
சிரித்து விளையாடி சிந்தை குளிர்ந்தோம்
அட்டையின் பயம் மட்டும்
நாங்கள் வந்ததால் அட்டைக்கும் வேட்டை!

அந்தியில் திரும்பினோம்
அற்புத வனத்தைவிட்டு
நாங்களெல்லாம் பேருந்தில்
மனம் மட்டும் வனாந்தரத்தில் !

இரவு உணவு சொர்க்கத்தில்... அடுத்த பதிவில் ...

நிஜ கதாநாயகர்கள்

ரெம்ப நாளைக்கு அப்புறம் ஏற்கனவே எழுதி வச்சத இப்போ இங்க பதிவு பண்றேன். இது ஒரு முயற்சிதானே தவிர நான் கவிஜன் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இப்போ படியுங்கள்

மேற்குலக வீதிகளில் நிரந்தரமற்ற
அரிதார பூச்சுக்களுடன்
அலைந்து திரியும் முகங்களின்
ஒப்பனைக்கூட்டை களைத்தெறிந்த
அதிர்வுற்ற முகங்களின் அளவீடு !
குறியீடுகளில்...
துயரத்தில் வுழலும் நிழர்ப்பாவைகளின்

முகத்தில் வளர்ந்த ஆகாயத்தாமரைகளை
சவரம் செய்ய
கண்ணாடி சில்லுகளை கூர்தீட்டி
காதலர் தினத்தை புறந்தள்ளி
சேவை செய்ய வந்த
சிப்பியிநூடான நல்முத்துக்கள்
அரிதார பூச்சற்ற
நிஜ கதாநாயகர்கள்...

தமிழில் வாக்கியம் அமைக்க