Thursday, July 30, 2009

அங்கன்வாடி அடாவடி- 2

இப்படியாக பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிகிட்டமாதிரி முருகனும் மாட்டிகிட்டான் . அதற்கு தண்டனை கொஞ்சம் ஓவர்தான் என்ன அப்பறம் அப்பா தாஜா செய்ஞ்சது தனி. வழக்கம் போல அப்பா சுப்பிரமணி முருகன ரயில்வே கேட் டை தாண்டி விட்டுட்டு போய்ட்டார் . ஆனாலும் சுப்பிரமணி இந்த முறை வீட்டுக்கு போவது போல போய் திரும்பி வந்து தண்டவாளம் தடுப்பு ஓன்று இருக்கும் அதன் மேல் ஏறி நின்று பார்ப்பது முருகனுக்கு தெரியாது, இது எப்படி என்றால், முருகன் வழக்கம்போல பம்புசெட் பின்னாடி உட்கார்த்து இருந்ததை ஒருமுறை காலயில பம்புசெட்ல குளிக்க வந்த ஒருத்தர் போய் சுப்ரமணியிடம் போட்டுகொடுத்து விட்டனர். என்னடா சுப்பிரமணி ஒம்பையன் சாம்பார்வீட்டு மோட்டார் கொட்டாயண்ட ஒக்காந்து இருக்கான் தனியா ..... அப்படீன்னு வத்திவைக்க அடுத்த நாள் இதை உறுதி செய்ய இந்தமாதிரியான ஒரு நிகழ்ச்சி, இத எதையுமே அறியாத முருகன் வழக்கம்போல நேரா போய் பம்புசெட் பின்னாடி உட்கார்து கொண்டான், அவனுக்கு என்னானா சுத்தியிலும் கரும்ம்பு தோட்டம் இருக்கே யாருக்கும் தெரியாதுன்னு நேனைச்சுட்டான்.

இத நேரா பார்த்த முருகனின் அப்பாவிற்கு கோவம் தலைக்கேறி வேகமா போனாரு ஏற்கனவே முருகன் அங்கன்வாடி போக அடி ஒத வாங்கறது வர்க்கமா இருந்து வந்த நேரத்துல இந்த நிகழ்ச்சி பிராடுதான் பன்றான்னு கோவம் எஅன்ன சுப்பிரமணி ஊர்ல ரொம்ப நல்ல மனுஷன் , நேர்மையான ஆளு , ஒழுக்கமான ஆளு , பொய் பேச தெரியாத மனசுக்குள் ஒன்னு வெளியில ஒண்ணுன்னு பழகதெரியாத மனுஷன்.

அதனால பயங்கரமா கோவம் மனுஷனுக்கு வந்த வேகத்துல பைய்யன புடிச்சு அங்கேயே நாலு சாத்து சாத்தி கைய புடிச்சு தர தரன்னு இழுத்துகிட்டு வந்தாரு, அவரோட கை இருக்கே அப்பா இரும்ம்புன்னு தான் சொல்லணும் அவரோட ஒரு கைய்யாள முருகனோட ரெண்டு கையா யையும் சேஅத்து புடிச்சி கிட்டார்னா அவ்ளோதான் உடும்பு பிடித்தான் .

நேரா வீட்டுக்கு உள்ள இழுத்து வந்தாரு , அப்புறம் என்ன அடி அபிஷேகம்தன் சும்மா பொரட்டி எடுத்துட்டாரு, என்னாடா போய்யா சொல்றே ன்னு சொல்லி அப்பிடியே தூக்கி வெளியில போட்டுட்டாரு நாடுவுல தடுக்கவந்த முருகனோட அம்மாவுக்கு வேற அடி அப்பவுமே முருகன் அடி வாங்கும்போது அவனோட அம்மாதான் அவனுக்கு கடவுள் அம்மா பின்னாடி ஓடி போய் மறைய அவனோட அப்பா பிடித்து இழுத்து அடிக்க இதுவே வர்க்கமா இருந்தது. இன்றைக்கு கொஞ்சம் ஓவராயிடுச்சி தூக்கி போட்டவோடனே முருகன் நேரா போய் கதவுல இடிச்சான் அடுத்த நிமிடம் அவனோட மொகத்துல இருந்து செவப்பா ரத்தம் சொட்ட அம்மாவுக்கு வெறி பிடித்துவிட்டது அப்பாவ பத்து இந்த மனுஷனுக்கு என்ன தாஅன் வந்துடுச்சோ தெரியலையே புள்ளைய இந்த அடி அடிக்கரரே ஐயஐயோ புள்ளைய சாகடிசுடுவான் போலிருக்கே இன்னு ஒரே சத்தம், அப்புறமாதான் சுப்ரமணிக்கு விபரீதம் தெரிய வந்த ஒடனே தவறு பிரிய வந்து ஓடி வந்து முருகன தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள் .

அன்றைக்கு சாயந்தரமா கலர்களர பூந்தி போண்டா மிக்சர் சுண்டல் காரன்கிட்ட சுண்டல் ன்னு வாங்கிவந்து முருகன தாஜா பண்ணிட்டு கேட்டார் , ஏன்டா ஸ்கூலுக்கு போறியா ? ன்னு முருகன் அன்கன்வாடி போகாமல் இருந்தால் போதுமென்று உடனே "நான் ஸ்கூலுக்கு போறேன் பா " பதில் சொன்னான் .

இத்துடன் முருகனின் அங்கன்வாடி அடாவாடி முடிவுக்கு வந்தது .

படிச்சுட்டு மறக்காம உங்க ஓட்ட போடுங்க மக்களா ! இது கதை அல்ல நிஜம்

No comments:

Post a Comment

பின்னூட்டமிட்டு செல்லுங்கள்...

தமிழில் வாக்கியம் அமைக்க