Thursday, July 30, 2009

அங்கன்வாடி அடாவடி- 2

இப்படியாக பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிகிட்டமாதிரி முருகனும் மாட்டிகிட்டான் . அதற்கு தண்டனை கொஞ்சம் ஓவர்தான் என்ன அப்பறம் அப்பா தாஜா செய்ஞ்சது தனி. வழக்கம் போல அப்பா சுப்பிரமணி முருகன ரயில்வே கேட் டை தாண்டி விட்டுட்டு போய்ட்டார் . ஆனாலும் சுப்பிரமணி இந்த முறை வீட்டுக்கு போவது போல போய் திரும்பி வந்து தண்டவாளம் தடுப்பு ஓன்று இருக்கும் அதன் மேல் ஏறி நின்று பார்ப்பது முருகனுக்கு தெரியாது, இது எப்படி என்றால், முருகன் வழக்கம்போல பம்புசெட் பின்னாடி உட்கார்த்து இருந்ததை ஒருமுறை காலயில பம்புசெட்ல குளிக்க வந்த ஒருத்தர் போய் சுப்ரமணியிடம் போட்டுகொடுத்து விட்டனர். என்னடா சுப்பிரமணி ஒம்பையன் சாம்பார்வீட்டு மோட்டார் கொட்டாயண்ட ஒக்காந்து இருக்கான் தனியா ..... அப்படீன்னு வத்திவைக்க அடுத்த நாள் இதை உறுதி செய்ய இந்தமாதிரியான ஒரு நிகழ்ச்சி, இத எதையுமே அறியாத முருகன் வழக்கம்போல நேரா போய் பம்புசெட் பின்னாடி உட்கார்து கொண்டான், அவனுக்கு என்னானா சுத்தியிலும் கரும்ம்பு தோட்டம் இருக்கே யாருக்கும் தெரியாதுன்னு நேனைச்சுட்டான்.

இத நேரா பார்த்த முருகனின் அப்பாவிற்கு கோவம் தலைக்கேறி வேகமா போனாரு ஏற்கனவே முருகன் அங்கன்வாடி போக அடி ஒத வாங்கறது வர்க்கமா இருந்து வந்த நேரத்துல இந்த நிகழ்ச்சி பிராடுதான் பன்றான்னு கோவம் எஅன்ன சுப்பிரமணி ஊர்ல ரொம்ப நல்ல மனுஷன் , நேர்மையான ஆளு , ஒழுக்கமான ஆளு , பொய் பேச தெரியாத மனசுக்குள் ஒன்னு வெளியில ஒண்ணுன்னு பழகதெரியாத மனுஷன்.

அதனால பயங்கரமா கோவம் மனுஷனுக்கு வந்த வேகத்துல பைய்யன புடிச்சு அங்கேயே நாலு சாத்து சாத்தி கைய புடிச்சு தர தரன்னு இழுத்துகிட்டு வந்தாரு, அவரோட கை இருக்கே அப்பா இரும்ம்புன்னு தான் சொல்லணும் அவரோட ஒரு கைய்யாள முருகனோட ரெண்டு கையா யையும் சேஅத்து புடிச்சி கிட்டார்னா அவ்ளோதான் உடும்பு பிடித்தான் .

நேரா வீட்டுக்கு உள்ள இழுத்து வந்தாரு , அப்புறம் என்ன அடி அபிஷேகம்தன் சும்மா பொரட்டி எடுத்துட்டாரு, என்னாடா போய்யா சொல்றே ன்னு சொல்லி அப்பிடியே தூக்கி வெளியில போட்டுட்டாரு நாடுவுல தடுக்கவந்த முருகனோட அம்மாவுக்கு வேற அடி அப்பவுமே முருகன் அடி வாங்கும்போது அவனோட அம்மாதான் அவனுக்கு கடவுள் அம்மா பின்னாடி ஓடி போய் மறைய அவனோட அப்பா பிடித்து இழுத்து அடிக்க இதுவே வர்க்கமா இருந்தது. இன்றைக்கு கொஞ்சம் ஓவராயிடுச்சி தூக்கி போட்டவோடனே முருகன் நேரா போய் கதவுல இடிச்சான் அடுத்த நிமிடம் அவனோட மொகத்துல இருந்து செவப்பா ரத்தம் சொட்ட அம்மாவுக்கு வெறி பிடித்துவிட்டது அப்பாவ பத்து இந்த மனுஷனுக்கு என்ன தாஅன் வந்துடுச்சோ தெரியலையே புள்ளைய இந்த அடி அடிக்கரரே ஐயஐயோ புள்ளைய சாகடிசுடுவான் போலிருக்கே இன்னு ஒரே சத்தம், அப்புறமாதான் சுப்ரமணிக்கு விபரீதம் தெரிய வந்த ஒடனே தவறு பிரிய வந்து ஓடி வந்து முருகன தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள் .

அன்றைக்கு சாயந்தரமா கலர்களர பூந்தி போண்டா மிக்சர் சுண்டல் காரன்கிட்ட சுண்டல் ன்னு வாங்கிவந்து முருகன தாஜா பண்ணிட்டு கேட்டார் , ஏன்டா ஸ்கூலுக்கு போறியா ? ன்னு முருகன் அன்கன்வாடி போகாமல் இருந்தால் போதுமென்று உடனே "நான் ஸ்கூலுக்கு போறேன் பா " பதில் சொன்னான் .

இத்துடன் முருகனின் அங்கன்வாடி அடாவாடி முடிவுக்கு வந்தது .

படிச்சுட்டு மறக்காம உங்க ஓட்ட போடுங்க மக்களா ! இது கதை அல்ல நிஜம்

Tuesday, July 28, 2009

ம்கும் வந்துட்டாரு மறுபடியும் அடிவாங்கி வைக்கறதுக்கு....

ஒரு நா இன்னா ஆச்சு ... நம்ம முருகன் அப்பனோட சேந்து வீட்டுக்கு வெள்ளை அடிச்சாங்க , அன்னக்கிதான் வெள்ளஅடிக்க ஸ்டார்ட் பண்ணாங்கோ ... மொதல்ல ஒரு ரெண்டு ரூமஅடிச்சாங்க அப்புறம் முருகன ஏணிய புடிக்க விட்டுட்டாரு அப்பா ஏணி மேல நின்னு வெள்ள அடிக்க ஆரம்பிச்சுட்டாரு ...நம்மாலும் கோழி சூ -ல முட்டைய தேடுற கணக்கா மூஞ்சிய வச்சிகினு ஏணிய புடிசுகினு நின்னு கிட்டு கருமமே கண்ணா இருந்தான், என்ன பன்றது எவ்ளோ நேரந்தான் ஒரே மாதிரி நின்னு தொலைக்கறது, ஒன்னுக்கு வந்து குஞ்சி வேற வெறப்பா நின்னுகினு ஜட்டி போடாத திரௌசற முட்டுது, சரி அப்பாகிட்ட சொல்லலாம்னு மேல பார்த்தான் , அங்க அப்பாவோட கால் சட்டைக்குள்ள குண்டும் குச்சியும் கூத்தாடுரத பாத்துட்டான் , பாத்தா இல்ல சும்மா இருக்க வேண்டியது தானே கெக்கே பிக்கே ன்னு சிருச்சுட்டன் . மேல இருந்த அப்பாவுக்கு விபரீதம் புரிஞ்சுடுத்து , வேகமா கீழே இரங்கி வந்த்தாறு நம்மாளு தலையில நங்குன்னு ஒரு கொட்டு வச்சிட்டு ஒழுங்கா ஏணிய புடிடா ன்னுட்டு மறுபடியும் மேல ஏறிட்டாரு, நம்மாளு மூஞ்சிய முக்காலி போட்டு வச்சிட்டு நின்னுகிட்டே இருந்தான் ஏணிய புடிச்சிகிட்டு . என்ன பன்றது ஜட்டி இல்லாத கால் சட்டைக்குள்ள கருப்பு குதுர சதிராட்டம் ஆடுதே ... சரி இந்த முறை அப்பாவ மட்டும் பாத்து நான் ஒன்னுக்கு போறேன்னு சொல்லுவேண்டியது தான் ன்னு நெனைச்சுகிட்டு மேல பாத்தான் , மறுபடியும் அப்பா போட்ட லூசான கால் சட்டை க்குள்ள மேட்டரு மங்கினி ஆட்டம் போட நம்மாளுக்கு பயங்கர கோவம் சிரிச்சா
அப்பா ஒதப்பாறு ஏற்கனவே அடி வேர வாங்கியாச்சு நம்மாளு மனசு புழுங்கி சொன்னான் " ம்கும் வந்துட்டாரு மறுபடியும் அடிவாங்கி வைக்கறதுக்கு ".

Monday, July 27, 2009

அங்கன்வாடி அடாவடி

அப்போ முருகனுக்கு நாலு இல்ல அஞ்சு வயசு, ரெண்டு வயசு வரைக்கும் அம்மா ரத்தத்த பாலா குடிச்சு அடுத்த ரெண்டு வயசு வரைக்கும் வீட்டில செல்ல பிள்ளையா இருந்தவன அங்கன்வாடியில தர தரன்னு இழுத்துகினு போயி சேர்த்தாரு முருகனுக்கு நரகமா இருந்தது.

ஒவ்வொரு நாளும் அடி வாங்கி கிட்டுதான் போனான் . எங்கள் வீட்டில் இருந்து அங்கன்வாடி பக்கத்து வூர்ல இருந்தது வழி அர கிலோமீட்டர் நடந்துதான் போவனும். மெயின் ரோடு தாண்டி ரயில்ரோடு தாண்டி போவனும் வழி நெடுகிலும் தூங்கு மூஞ்சி மரங்கள் அழகாக தன் இலைகளை அசைத்து அசைத்து வீட்டுக்கு போடாபோடா என்று சொன்னது போன்ற ஒரு பிரமை என்னத்த செய்ய முதல் நாளே நான் போகமாட்டேன் என்று சொன்னான் ஆனான் கேட்க ஆள் வேண்டுமே ! ஆனாலும் அந்த மனவெளி ரோடு அழகோ அழகு இரு புறமும் வயல்வெளி கரும்பு தோட்டங்கள் இடது பக்கம் மேட்டுபாலயதாரின் நெல்லு வயல் வலது பக்கம் சாம்பாரு வீட்டு கரும்பு தோட்டம், பச்சைபசேல் வரப்புகள் இடையில் பாம்பு செட் , அப்படியே போனா இடது பக்கம் அரச மரம், பிள்ளையார் கோயில் , குளம், மாரியம்மன் கோயில் , இத தாண்டினாத்தான் நம்மாளு நரகம் அதாங்க அங்கன்வாடி.

அங்கன்வாடி, அந்த வூரு படையச்சியாரோட வீடு, முதல் நாள் காலையில கொண்டுபோய் நம்மால விட்டாங்க , நம்மாளு அழுது பொரண்டு , அடி ஓத வாங்கி அழுது வடிந்த கண்களோட போயி ஒக்காந்தான்.

சும்மா சொல்லக்கூடாது அங்க kaalaiyila பாட்டு, கதை எல்லாம் சொல்லி குடுத்தாங்க அப்புறம் மதியம் சாப்பாடு என்னானா கோதுமை கலி நல்லா கொழ கொழன்னு போடுவாங்க அது நம்மாளுக்கு சுத்தமா புடிக்காது. என்ன பன்றது சாப்பிட்டுதான் ஆகணும். ஓகே அடுத்து எல்லோரயும் தூங்க வைப்பாங்க யாராவது தூங்கல அங்க பசங்கள பாத்துக்க இருக்கற அந்த பொண்ணு நீலமா ஒருகுச்சி வச்சிகிட்ட்டு டோபுன்னு ஒன்னு போடும், தூங்கரியோ இல்லையோ கண்ணா மூடிகிட்டு இருக்கணும் . அப்புறமா ஒரு மூணு மணிக்கு மூக்கு கடல அவிச்சு கை நெறைய கொடுப்பாங்க, அத நம்மாளுங்க டிரௌசர் சொக்காயில போட்டுக்கிட்டு வீட்டுக்கு போவாங்க.

நம்ம முருகனுக்கு சுத்தமா அங்கன்வாடி பிடிக்கவே இல்ல, வீட்டிலிருந்து கிளம்பி அப்பா கூட ரயில்வே ரோட தாண்டி வந்தவுடன் நேரா போக வேண்டியது பாம்பு செட் பின்னாடிபோயி ஒக்கந்துக்க வேண்டியது அதுவும் அழகா திரும்பி திரும்பி பார்க்க வேண்டியது யாரும் பாக்கலன்னு தெரிஞ்ச வொடனே நைசா வரப்புமேடு மேல நடந்து சாம்பாரு வீட்டு பம்புசெட்டு பின்னால ஒக்காந்துட வேண்டியது.
இதே பொழப்பா ஓடின வண்டி ஒருநாளு மாட்டிகிச்சி.........
-அடிவாங்கி கன்னம் கிழிந்த படலம் அடுத்த பதிவில் ....

Thursday, July 23, 2009

கட்டியக்காரனின் வந்தனங்கள் !

வணக்கம் ! வணக்கம் ! வணக்கம் !
வலைதள சபையோர்களுக்கு என் அன்புகலந்த வணக்கம் ! நான் கட்டியக்காரனுங்க. எங்கயோ புதுச்சேரியில் கு. நா. பாளையத்துல பிறந்து வளர்ந்து இப்போ சிங்கார சென்னையில எந்திரத்தோட எந்திரமா வாழ்க்கைய ஓரளவு மனிதனாகவும் நேர்மையாகவும் இருப்பதாக நினைத்து என்னை சுற்றி நல்ல நண்பர்களின் துணையோடு, முதுகலை முடித்த என்னை சென்னைக்கு அறிமுகம் செய்து என் முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருக்கும் என் இனிய நண்பன் பால சரவணனுக்கும், சென்னையில் யாரென்றே தெரியாத எனக்கு நண்பன் பாலா சொன்னதற்கு இணங்க நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும், என்னையும் ஒரு நண்பனாக சகோதரனாக, எனக்கு தன்னுடைய பிரஸ்ஸில் வேலையும் கொடுத்து , அடைக்கலமும் கொடுத்த கே. எஸ். கே. பிரசாத், என்னை அந்நியனாக பார்காமல் குடும்பத்தில் ஒருத்தனாகவே பார்த்த சுதா அக்கா, கோவிந்து அண்ணன் மற்றும் என் முன்னேற்றத்துக்கு உதவிய என் இனிய நண்பர்களுக்கும் இந்த பதிவின் மூலம் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன். நன்றி !

வணக்கம் !

தமிழில் வாக்கியம் அமைக்க